உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலை பாதுகாப்பு பிரசுரம் வழங்கல்

சாலை பாதுகாப்பு பிரசுரம் வழங்கல்

திட்டக்குடி : தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, திட்டக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமை தாங்கி, வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.அதில், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ெஹல்மெட் அணிய வேண்டும். இருவருக்கு மேல் பயணம் செல்லக்கூடாது. காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும். வளைவுகளில் முந்தி செல்லக்கூடாது.சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொது மக்கள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ