மேலும் செய்திகள்
ஏரி கரையில் கருவேல மரங்கள் அகற்ற கோரிக்கை
23-May-2025
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வெள்ளாறுராஜன் கரையில் சாலையோரம் படர்ந்துள்ள கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.சென்னை-கும்பகோணம் சாலையில் சேத்தியாத்தோப்பு, வடக்கு மெயின்ரோடு வெள்ளாறுராஜன் வாய்க்கால் முதல், பின்னலுார் வாலாஜா ஏரி வாய்க்கால் வரை சாலையின் இருபுறங்களிலும் சீமைகருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டி போல் காட்சியளிக்கிறது.இந்த சாலையில் அதிகளவில் பஸ்கள், லாரிகள் சென்று வரும் நிலையில் சாலையோரம் படர்ந்துள்ள மரங்களால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். முட்புதரில் இருந்து வெளியே வரும் விஷ ஜந்துகள் சாலையில் நடமாடுகின்றன. குறிப்பாக, மின் விளக்கு வசதியில்லாததால் இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துகள் நடக்கிறது.கடந்த காலங்களில் மாதத்திற்கு ஒருமுறையாவது முட்புதர்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றி வந்தனர். கடந்த ஒரு ஆண்டாக முட்புதர்களை அகற்றாமல் உள்ளனர். இதனால், நாளுக்கு நாள் முட்புதர்கள் அதிகளவில் வளர்ந்து வருகிறது. எனவே, இனியாவது முட்புதர்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
23-May-2025