உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது; சிதம்பரம் போலீசார் அதிரடி

வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது; சிதம்பரம் போலீசார் அதிரடி

சிதம்பரம் : சிதம்பரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி,46: லாரி டிரைவர். இவர் கடந்த 10ம் தேதி சிவபுரி மெயின்ரோட்டில் நடந்து சென்றபோது, அண்ணாமலை நகரை சேர்ந்த பாபு (எ) மர்டர் பாபு,43; வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஒரு சவரன் தங்கசெயினை பறித்து சென்றார்.இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். அதில் கிடைத்த தகவலின்பேரில் அண்ணாமலை நகர் ரயி்ல்வே மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த பாபுவை கைது செய்து, அவர் வைத்திருந்த கத்தி மற்றும் தங்க செயினை பறிமுதல் செய்தனர். போலீசார் பாபுவை பிடிக்க முயன்றபோது, தப்பிக்க முயன்றதால் கீழே விழுந்ததில், இடதுகையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட பாபு மீது இரட்டை கொலை வழக்கு, கஞ்சா விற்பனை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும், வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி