உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பண்ருட்டி மாணவர் சாதனை

ரோலர் ஸ்கேட்டிங் போட்டி பண்ருட்டி மாணவர் சாதனை

பண்ருட்டி: மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் 3 தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். கடலுார் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் சார்பில் 19 ம் ஆண்டு மாவட்ட அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் முள்ளோடையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. போட்டியில் பங்கேற்ற, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் கோகுல் மூன்று தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார். போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் கோகுலை, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி