மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கு விருது
06-Sep-2025
மந்தாரக்குப்பம்: நெய்வேலியில் ரோட்டரி கிளப் ஆப் நெய்வேலி லிக்னைட் சிட்டி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது. ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநர் நாகரத்னா தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் சீனிவாசன், சந்திரமவுலி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஆளுநர் மணி, பேராசிரியர் இளமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியர்களை வாழ்த்தி பேசினர். நெய்வேலி சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 64 பேருக்கு 'தேசிய கட்டமைப்பாளர்' விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவில், சாசன தலைவர் குருமூர்த்தி, டாக்டர் இளங்கோாவன், முன்னாள் தலைவர்கள் நடராஜன், சிவசங்கரன், பால்ராஜ், நடராஜன், முன்னாள் உதவி ஆளுநர் பாலாஜி, சங்க நிர்வாகிகள் அருள்மணி, ஆல்பர்ட் ஜேசுதாஸ், தியாகராஜன், செந்தில்குமார், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
06-Sep-2025