உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ. 1 லட்சம் குட்கா ஒப்படைப்பு

ரூ. 1 லட்சம் குட்கா ஒப்படைப்பு

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்த ரூ. 1 லட்சம் குட்கா பொருட்களை சிதம்பரம் உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.சிதம்பரம் இருப்பு பாதை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அருண் தலைமையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீசார் கோபாலகிருஷ்ணன், தமிழ்செல்வன் உள்ளிட்ட போலீசார் சிதம்பரம் வரும் விரைவு மற்றும் பாசஞ்சர் ரயில்களில் சோதனை மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், பிப்ரவரி 15, மார்ச் 23, 29, மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் சிதம்பரம் வழியாக சென்ற விரைவு ரயில்களில் சோதனை மேற்கொண்டபோது, கேட்பாரன்றி கிடந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 கிலோ பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களை, ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார், நேற்று சிதம்பரம் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரனிடம், ஒப்படைத்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ