ரூ. 2 லட்சம் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
புவனகிரி : புவனகிரி அருகே வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புவனகிரி அடுத்த குறியாமங்கலம், மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் கனகராஜ்,38; இவர் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறார். அவரது வீட்டில் தாய் பத்மாவதி மட்டும் வசிக்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hvnh8rgh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பத்மாபதி வீட்டை பூட்டி விட்டு கடந்த மார்ச் 14ம் தேதி சிதம்பரத்தில் உள்ள மற்றொரு மகன் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை 8.00 மணிக்கு குறியாமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு வந்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு செயின், குருமாத், மோதிரம் என, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 சவரன் நகைகள், 1 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்ட சில பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து கனகராஜ் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.