விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 22.50 லட்சம் இழப்பீடு
கடலுார் : கடலுார் கோர்ட்டில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகைக்கான நகல் வழங்கப்பட்டது.கடலுார் கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. சென்னை ஐகோர்ட் நீதிபதி, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் ஜெகதீஷ் சந்திரா தலைமை தாங்கி, விபத்தில் இறந்த சதீஷ்குமார் என்பவருக்கான 22 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகைக்கான நகலை அவரது தந்தை பழனிமுத்துவிடம் வழங்கினார்.சென்னை ஐகோர்ட் பதிவாளர் (சிறப்பு பிரிவு) நசீர் அகமது, கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர், வழக்கறிஞர் முகுந்தன் உடனிருந்தனர்.