உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாஜி அதிகாரியிடம் ரூ.5.24 லட்சம் அபேஸ்  

மாஜி அதிகாரியிடம் ரூ.5.24 லட்சம் அபேஸ்  

கடலுார்: கடலுாரில் வங்கியில் பணம் எடுக்க வருபவர்களின் கவனத்தை திசை திருப்பி, பணத்தை அபேஸ் செய்யும் மர்ம நபர்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் மனோகரன்,66; ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி. இவர் நேற்று மதியம் மஞ்சக்குப்பம் தனியார் வங்கியில் தனது வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் எடுத்தார். மொபட்டில் பணத்தை வைத்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர், அதிகாரியின் கவனத்தை திசை திருப்பி பணத்தை அபேஸ் செய்தார். அதையறியாமல் வீட்டிற்கு வந்த அவர், மொபட் சீட்டிற்கு கீழ் வைத்த பணத்தை பார்த்த போது காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர். இதேப் போன்று, நேற்று முன்தினம் மஞ்சக்குப்பத்தில் உள்ள மற்றொரு தனியார் வங்கியில் 1 லட்சம் ரூபாய் எடுத்து மொபட்டில் வைத்தவரின் கவனத்தை திசை திருப்பி மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். அடுத்தடுத்த நாட்களில் வங்கியில் பணம் எடுத்து வருபவர்களின் கவனத்தை திசை திருப்பி, மர்ம நபர்கள் பணத்தை அபேஸ் செய்வது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ