உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விபத்தில் இறந்த துணிக்கடை உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ.75 லட்சம் இழப்பீடு

விபத்தில் இறந்த துணிக்கடை உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ.75 லட்சம் இழப்பீடு

கடலுார்: விபத்தில் இறந்த துணிக்கடை உரிமையாளர் குடும்பத்திற்கு ரூ. 75 லட்சம் நஷ்டஈடு வழங்க கடலுார் கோர்ட் உத்தரவிட்டது. சிதம்பரம் அடுத்த வேளங்கிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்,45; நெய்வேலி டவுன்ஷிப்பில் துணிக்கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 2019, டிச., 23ம் தேதி நெய்வேலி இந்திரா காந்தி சாலையில் தனது மகள் மதிவதனியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த பைக்கும், சங்கர் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதின. இதில் காயமடைந்த சங்கர், மதிவதனி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின், கடலுார் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சங்கர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இறந்த சங்கரின் மனைவி சங்கீதா, மகன் ரஞ்சித், மகள் மதிவதனி ஆகியோர் கடலுார் மூத்த வழக்கறிஞர் சிவமணி மற்றும் வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யாஆகியோர் மூலம் நஷ்ட ஈடு கேட்டு கடலுார் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 2ல் மனுத் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரகாஷ், சங்கர் குடும்பத்தாருக்கு 53 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மற்றும் 7.5 சதவீதம் வட்டி, செலவு தொகை என மொத்தம் 75 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை