மேலும் செய்திகள்
பட்டாசு கடைகளில் ஆய்வு
26-Sep-2025
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கோரிய இடங்களில், ஆர்.டி.ஓ., விஷ்ணு பிரியா ஆய்வு செய்தார். தீபாவளி பண்டிகை முன்னிட்டு விருத்தாசலம் உட்கோட்டத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் இயங்குவது வழக்கம். அதன்படி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் தாலுகாவில் பண்டிகை காலத்திற்கு மட்டும் தற்காலிக அனுமதி கோரி 32 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனை, ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா ஆய்வு செய்தார். அப்போது, அவசர கால வழிகள், தீயணைப்பு சாதனங்கள், மின் இணைப்பு உட்பட பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்தார். தொடர்ந்து, விருத்தாசலம் பாலக்கரை, பஸ் ஸ்டாண்ட், ஜங்ஷன் சாலை, ஆலடி சாலையில் அனுமதி கோரிய இடங்களில் ஆய்வு நடந்தது. துணை தாசில்தார் அன்பரசு, வருவாய் ஆய்வாளர் ராஜசேகரன், வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், உதவியாளர் வேல்ருகன் உடனிருந்தனர்.
26-Sep-2025