மேலும் செய்திகள்
வீட்டு மனை பட்டா கேட்டு கிராமவாசிகள் போராட்டம்
13-Mar-2025
விருத்தாசலம்; தொழுதுார் கிராம மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.திட்டக்குடி அடுத்த தொழுதுார் பகுதியில் 200க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள 15 ஏக்கர் அரசு நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க மூன்று ஆண்டுகளுக்கு மேல் போராடி வருகின்றனர்.இதுசம்பந்தமாக கலெக்டர், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளனர். இந்நிலையில், அந்த பகுதியில் உள்ள அரசு நிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதில், ஆத்திரமடைந்த மக்கள், தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்டு, பட்டியலின மக்களுக்கு இலவச மனைபட்டா வழங்க வேண்டுமென, வி.சி., கட்சி சார்பில், நேற்று விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு, கோரிக்கை மனு அளித்துவிட்டு களைந்து சென்றனர். இச்சம்பவத்தால், பரபரப்பு நிலவியது.
13-Mar-2025