உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊரக வளர்ச்சி துறை போராட்டம் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

ஊரக வளர்ச்சி துறை போராட்டம் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு

கடலுார்: ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நடத்தி வந்த போராட்டம், கலெக்டரின் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதையொட்டி காலவரையற்ற வேலை நிறுத்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் கொளஞ்சி விடுத்துள்ள அறிக்கை: வேலை நிறுத்த போராட்டம் குறித்து நேற்று (நவ.,25) ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் முன்னிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து வேலை நிறுத்தப்பட்ட போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனையேற்று அனைத்து நிலை அலுவலர்களும் இன்று (நவ.,26) முதல் பணிக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை