உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரேஷன் அரிசி விற்பனை? தனியார் கடையில் ஆய்வு

ரேஷன் அரிசி விற்பனை? தனியார் கடையில் ஆய்வு

காட்டுமன்னார்கோவில்: தனியார் கடையில் ரேஷன் அரிசி விற்பனை தொடர்பாக ஆய்வு நடந்தது. காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் பிரபல தனியார் அரிசி கடையில் கள்ளத்தனமாக ரேஷன் அரிசி விற்கப்படுவதாக, புகார் எழுந்தது. நேற்று முன்தினம் இரவு கடலுார் மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்ட வழங்கல் அலுவலர் பழனி ஆகிய இருவரும் அந்த கடையில் சோதனையில் ஈடுபட்டனர். விற்பனைக்கு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை ஒவ்வொன்றாக சோதனை செய்தனர். மேலும் குடோனில் இருந்த அனைத்து ரக அரிசிகளையும் சோதனைக்கு மாதிரி எடுத்து சென்றனர். பரிசோதனையில் ரேஷன் அரிசி கலப்படம் செய்தது, தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை