உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அலங்கார பொருட்கள் விற்பனை ஜோர்

அலங்கார பொருட்கள் விற்பனை ஜோர்

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடை வீதியில் ஆயுத பூஜை முன்னிட்டு அலங்கார பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது. ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு வீடு, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களை வண்ண பேப்பர்களால் அலங்கரித்து சுவாமியை வழிபடுவது வழக்கம். இதனை முன்னிட்டு, மந்தாரக்குப்பம் கடை வீதியில் அலங்கார பொருட்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. நெய்வேலி டவுன்ஷிப், மேட்டுக்குப்பம், அரசக்குழி, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடை, வாகனங்களுக்கு தேவையான அலங்கார பொருட்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வண்ண பேப்பர், ஸ்டிக்கர், அலங்கார வளைவுகள், பிளாஸ்டிக் மாலைகள், பூங்கொத்து, ஜிகினா தாள்கள், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை எழுத்துகள் அடங்கிய ஸ்டிக்கர் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டு விற்பனை ஜோராக நடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி