மணல் திருடியவர் கைது
கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அடுத்த திருமாணிக்குழி பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருமாணிக்குழியைச் சேர்ந்த செல்வம்,60, என்பவர் மாட்டுவண்டியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்ததை போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.திருப்பாதிரிப்புலியூர் போலீசார், செல்வம் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.