உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சங்கமித்ரா மருத்துவமனை 2ம் ஆண்டு துவக்க விழா

சங்கமித்ரா மருத்துவமனை 2ம் ஆண்டு துவக்க விழா

கடலுார்: கடலுார், மஞ்சக்குப்பம் சங்கமித்ரா மருத்துவமனை இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. மருத்துவமனை உரிமையாளர்கள் இருதய நுரையீரல் மற்றும் ரத்த குழாய் அறுவை சிகிச்சை டாக்டர் இளமாறன்,நோய் தடுப்பு மற்றும் ரத்தவியல் டாக்டர் லாவண்யா இளமாறன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவில், பாலாஜி லேப் ராமலிங்கம், ஊழியர்கள் பங்கேற்றனர். இம்மருத்துவமனையில் லேசர் சிகிச்சையில் வெரிகோஸ் வெய்ன்ஸ், ரத்த குழாய் அடைப்புஓபன் மற்றும் ஆஞ்சியோ சிகிச்சை, ஆழ்நாள குருதி அடைப்பு, நீரிழிவு கால் புண்கள், கழுத்து நாள அறுவை சிகிச்சை, பெருந்தமனி அறுவை சிகிச்சை, லாப்ரோஸ்கோபில் ஓபன் நுரையீரல் அறுவை சிகிச்சை, செஸ்ட் ட்ராமா, மூச்சுக்குழாய் சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகள்அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை