சன்மார்க்க கருத்தரங்கு
பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் வள்ளலார் மாத பூசத்தையொட்டி, சன்மார்க்க கருத்தரங்கு நடந்தது. வள்ளலார் பணியகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பணியக பொறுப்பாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அரியலுார் சன்மார்க்க நெறியாளர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். திருச்சி தேன்மொழி இளவரசன், தமிழும் தமிழிசையும் தலைப்பில் கருத்துரை வழங்கினார். வள்ளலார் பணியக செயலாளர் பிரதாபன், பாரம்பரிய மருத்துவர் பெரங்கியம் வரதராஜன், வள்ளலாளர் பணியக நிர்வாகிகள் முருகன்குடி முருகன், கனகசபை, எரப்பாவூர் ராமசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.