உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கந்தன்பாளையம் ஏரியில் மரக்கன்றுகள் நடும் விழா

கந்தன்பாளையம் ஏரியில் மரக்கன்றுகள் நடும் விழா

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையம் ஏரியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. பண்ருட்டி அடுத்த கந்தன்பாளையம் ஊராட்சி ஏரியை புனரமைக்கும் பணி மாவட்ட சுற்றுச்சுழல் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு அமைப்பு சார்பில் முடிந்துள்ளது. ஏரியில் பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தார். ஸ்ரீராம் பேட்டரி உரிமயைாளர் ராஜசேகர், பண்ருட்டி வள்ளி விலாஸ் உரிமையாளர் சரவணன், குமாரசாமி இண்டஸ்ட்டிரிஸ் கார்த்திக் முன்னிலை வகித்தனர். ஸ்ரீராம் சோலார் உரிமையாளர் சிவக்குமார் வரவேற்றார். விழாவில், சபாபதி, எஸ்.வி., ஜூவல்லர்ஸ் அருள், பாலமுருகன், வீரப்பன், அண்ணா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் செந்தில்குமார், முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் செல்வமணி, அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை