மேலும் செய்திகள்
கடலிபுதுார் கோவில் நாளை கும்பாபிஷேகம்
06-Nov-2024
மகாராஷ்டிராவில் ஷிண்டே வியூகம் வெற்றி!
23-Nov-2024
கடலுார்: கடலுார், கூத்தப்பாக்கம் சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது. கடலுார், கூத்தப்பாக்கம் எல்.ஐ.சி.,நகர் சர்வசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (4ம் தேதி) காலை 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், லட்சுமி ேஹாமம் நடக்கிறது. மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கடம் புறப்பாடு, முதல் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.நாளை (5ம் தேதி) காலை 8:00 மணிக்கு விசேஷ சந்தி, கோ பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, மூலமந்திர ேஹாமம், மகா பூர்ணாகுதி நடக்கிறது. 11:05 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 11:25 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 11:40 மணிக்கு மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.
06-Nov-2024
23-Nov-2024