உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.பி., ஆபீசில் தொழிலாளி தற்கொலை முயற்சி

எஸ்.பி., ஆபீசில் தொழிலாளி தற்கொலை முயற்சி

கடலுார்: கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் ஒருவர் விஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் எஸ்.பி., அலுவலக வளாக நுழைவு வாயில் அருகில் நேற்றிரவு 11:00 மணிக்கு ஒருவர் மயங்கி கிடந்தார். அங்கு, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த நபரை மீட்டு விசாரணை நடத்தினர்.இதில், சிதம்பரம், வாழக்கொல்லையைச் சேர்ந்த பூவழகன், 45; என்பதும், கடன் பிரச்னையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கடலுார் அரசுமருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி