மேலும் செய்திகள்
பிளஸ் 2 மாணவர் மாயம்
18-Sep-2024
நெல்லிக்குப்பம்,: நெல்லிக்குப்பம் அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்த பள்ளி மாணவர், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.நெல்லிக்குப்பம் மாருதி நகரை சேர்ந்தவர் சையது. இவரது மகன் கரீம்,16; நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான ஷேக் அப்துல்லா மகன் ஆசீப்,14; காமராஜர் நகரை சேர்ந்த ஷாஜகான் மகன் அஸ்பாக்,15; ஆகியோருடன் நேற்று மாலை மேல்பட்டாம்பாக்கம் பெண்ணையாற்றுக்கு குளிக்க சென்றார்.அங்கு மணல் எடுத்த பள்ளத்தில் தண்ணீர் இறங்கி மூவரும் குளித்துள்னர். அப்போது, மாணவர் கரீம் பள்ளத்தில் இருந்த சேற்றில் சிக்கி மூழ்கினார். இதைா பார்த்த மற்ற இருவரும் வெளியே ஓடி வந்து சத்தம் போட்டனர்.தகவலறிந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையில் வீரர்கள் சென்று தண்ணீரில் மூழ்கி இறந்த கரீம் உடலை மீட்டனர்.தண்ணீரில் மூழ்கி இறந்த கரீமின் தந்தை சையத், வெளிநாட்டில் இருந்து விடுமுறையில் வந்திருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்புதான் திரும்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18-Sep-2024