உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பள்ளி மாணவர் தற்கொலை

 பள்ளி மாணவர் தற்கொலை

நெய்வேலி ஜன. 10-: நெய்வேலியில் பள்ளி மாணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து டவுன்ஷிப் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிதம்பரத்தை அடுத்த வத்தராயன் தொத்து கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலசுந்தரம். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் திவாகர். 15; சிவபால சுந்தரத்தின் சகோதரி கணவர் செல்வம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 10ல் உள்ள என்.எல்.சி., குடியிருப்பில் வசித்து வசித்து வருகிறார். அவர், என்.எல்.சி., 2 ம் சுரங்கத்தில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திவாகர் தனது மாமா செல்வம் வீட்டில் தங்கியிருந்து கடந்த 8 ஆண்டுகளாக நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். தற்போது 10 ம் வகுப்பு படித்து வந்த நிலையில், திவாகர் கடந்த 4 நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இதனால், அவரது பெற்றோரை அழைத்து வர வேண்டும் என திவாகரிடம் பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து திவாகர் தனது பெற்றோரிடம் கூறியும் அவர்கள் நேற்று வர தாமதமானதால் பயந்துபோன திவாகர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன்ஷிப் சப்இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி