மேலும் செய்திகள்
ராமச்சந்திரா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
08-Oct-2025
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.எஸ் பள்ளியில் 2025-26ம் ஆண்டிற்கான மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது. பூதங்குடி எஸ்.டி.எஸ் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு நடந்த கண்காட்சியை தாளாளர் சாமுவேல்சுஜின், நிர்வாக இயக்குனர் தீபாசுஜின் கண்காட்சியை துவக்கி வைத்தனர். திரைப்பட இயக்குனர் சுரேஷ்பாரதி சிறப்புரையாற்றினார். கண்காட்சியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் அறிவியல் சார்ந்த படைப்புகளை உருவாக்கி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தினர். பள்ளியில் நடைபெற்று வரும் கண்காட்சியில் மாணவர்களின் சிறந்த இடம் பிடிக்கும் படைப்புகளை கொண்டு தமிழக அரசால் நடத்தப்படும் வீட்டுக்கொரு விஞ்ஞானி என்ற கண்காட்சியில் மாவட்ட மாநில அளவில் அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
08-Oct-2025