மேலும் செய்திகள்
வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் பட்டமளிப்பு
25-Jan-2025
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.ஸ்பார்டன் இன்டர்நேஷனல் பள்ளி ஆசிரியர் அனந்த நாராயணன் ஸ்ரீபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குத்துவிளக்கேற்றி கண்காட்சியை துவக்கி வைத்தார். பண்ருட்டி ராதிகா மெட்ரிக் பள்ளி தாளாளர் சத்திய நாராயணன், பள்ளி இயக்குனர் உமா மகேஸ்வரி சத்திய நாராயணன், தமிழ்நாடு அறிவியல் மன்ற செயல் உறுப்பினர் பாலகுருநாதன் கவுரவு விருந்தினர்களாக பங்கேற்றனர். கண்காட்சியில் புதுமையான அறிவியல் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. சிறந்த படைப்புகள் உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன், உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு பங்கேற்றனர்.
25-Jan-2025