உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களைத் தேடி திட்டம் திட்டக்குடியில் ஆய்வு

உங்களைத் தேடி திட்டம் திட்டக்குடியில் ஆய்வு

கடலுார் : திட்டக்குடியில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் அரசின் நலத்திட்டங்களை, கலெக்டர் நாளை ஆய்வு செய்கிறார்.இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழக முதல்வரின் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டத்தின் கீழ் கலெக்டர் அருண் தம்புராஜ் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன் கிழமை வட்ட அளவில் தங்கி அரசின் நலத்திட்டங்களை ஆய்வு செய்கிறார்.அதன்படி, திட்டக்குடி வட்டத்தில் நாளை (21ம் தேதி) அரசின் நலத்திட்டங்கள், சேவைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்கிறார். திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மாலை 4:00 மணி முதல், 5:00 மணி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன. மேலும், அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு இக்கள ஆய்வு பணிகள் தொடர்பாக மதிப்பாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலமாக பொதுமக்களின் சேவைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக தமிழக அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை