உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூர் பஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி

வேப்பூர் பஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி

வேப்பூர் : வேப்பூர் பஸ் நிலையத்தில் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால், இரவில் பஸ் நிலையம் வரும் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.சென்னை - திருச்சி, சேலம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது. இதன் வழியே பல மாவட்டங்களுக்கு தினசரி ஏராளமான பயணிகள் தங்கள் சொந்த அலுவல் காரணமாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், வேப்பூரில், சென்னை மார்க்க சர்வீஸ் சாலையில் இருந்த பழைய பஸ் நிலையம் போதுமான வசதிகள் இல்லாததால் இடித்துவிட்டு, 2.62 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது.இதனை, கடந்த 2023ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.பஸ் நிலையம் திறந்து ஓராண்டுக்கு மேலாகியும், பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இங்குள்ள வணிக வளாகங்கள், கழிவறைகள் ஏலம் விடாமல் பூட்டியே வைத்துள்ளனர். மேலும், முக்கியமாக பஸ் நிலையத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. போலீஸ் பாதுகாப்பு இல்லாததாலும், இரவில் குடிமகன்கள் கூடாரமாகவும், சமூக விரோத செயல்களுக்கும் பயன்படுத்துகின்றனர். இதனால், இரவில் பஸ் நிலையம் வரும் பயணிகள், பெண்கள் அச்சமடையும் நிலை உள்ளது. எனவே, வேப்பூர் பஸ் நிலையத்தில் மின் விளக்குகள் அமைத்து, இரவில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை