உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலத்தில் மரக்கன்று நடல்

விருத்தாசலத்தில் மரக்கன்று நடல்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மரக்கன்று நடும் பணியை, நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் துவக்கி வைத்தார். விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 'துாய்மையே சேவை' என்ற இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி, கடந்த செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடந்து வருகிறது.இதில், திடக்கழிவு மேலாண்மை பணி, மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக நேற்று விருத்தாசலம் நகராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.இதில், நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் கலந்து கொண்டு, மரக்கன்றுகளை நட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.நகராட்சி சுகாதார அலுவலர் சக்திவேல், சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், துாய்மை பணி மேற்பார்வையாளர்கள் ஆறுமுகம், முத்தமிழ்செல்வன், வீராசாமி, வேல்முருகன், கணபதி, களப்பணி உதவியாளர் செங்குட்டுவன், ஒப்பந்த துாய்மை பணி மேற்பார்வையாளர்கள் ராஜன், திலக்ராஜன், சாந்தகுமார், விஜய், தமிழ்ச்செல்வன் மற்றும் துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் சந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை