உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மூத்தோர் தடகள விளையாட்டு வீரர்கள் சங்க கலந்தாய்வு

மூத்தோர் தடகள விளையாட்டு வீரர்கள் சங்க கலந்தாய்வு

கடலுார் : கடலுார் மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு வீரர்கள் சங்க கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.தமிழக அளவிலான முதியோர் தடகள போட்டிகள், ஈரோடு வ.உ.சி., ஸ்டேடியத்தில் டிசம்பர் 28, 29ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் கடலுார் மாவட்டத்திலிருந்து 35 வயதிலிருந்து 85வயது வரையில் உள்ள 38 ஆண்கள், 17 பெண்கள் ஆகிய 55பேர் பங்கேற்க உள்ளனர். அதற்கான கலந்தாய்வு கூட்டம், பேராசிரியர் நடராஜன் தலைமையில் நடந்தது. சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். துணைத் தலைவர் திருமலை, விளையாட்டு வீரர்களுக்கு சீருடை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர் கலை செல்வராஜன் மற்றும் பொருளாளர் திருஞானம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.செயலாளர் சுபாஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி