மூத்தோர் தடகள போட்டி கடலுார் வீரர்கள் சாதனை
கடலுார்: தடகள விளையாட்டு போட்டியில் கடலுார் மாவட்ட வீரர்கள், 58 பேர் பதக்கங்கள் பெற்றனர். திருவண்ணாமலையில் தென் மாநிலங்களுக்கு இடையேயான மூத்தோர் தடகள விளையாட்டு போட்டி நடந்தது. இதில், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, 58 பேர் கலந்து கொண்டு, 33 தங்கம், 27 வெள்ளி, 27 வெண்கல பதக்கங்களை பெற்றனர். இவர்களுக்கு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பாராட்டு விழா நடந்தது. மாவட்ட மூத்தோர் தடகள விளையாட்டு சங்க துணை தலைவர் திருமலை, மாநில துணைத்தலைவர் பாலசுந்தரம், மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், செயலாளர் சுபாஷ் பாபு ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். பொருளாளர் திருஞானம் நன்றி கூறினார்.