உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாலமுருகன் கோவிலில் செடல் உற்சவம்

பாலமுருகன் கோவிலில் செடல் உற்சவம்

புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் பாலமுருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, செடல் உற்சவம் நடந்தது..புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி கிராமம் பாலமுருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் காலை பாலமுருகனுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 9:00 மணிக்கு காவடி உற்சவம், மாலை 4:.00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொது மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை