மேலும் செய்திகள்
வி.இ.டி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
18-May-2025
விருத்தாசலம் : விருத்தாசலம் சக்தி மெட்ரிக் பள்ளி அரசு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. விருத்தாசலம் சக்தி மெட்ரிக் பள்ளியில் 10, 11 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பிளஸ் 2 தேர்வில் பள்ளி அளவில் 572 மதிப்பெண், பிளஸ் 1 வகுப்பில் 561 மதிப்பெண், 10ம் வகுப்பில் 495 மதிப்பெண் பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் 5 மாணவர்கள், அறிவியல் பாடத்தில் 4 மாணவர்கள், கணித பாடத்தில் 1 மாணவன் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிறுவனர் சந்தானம், தாளாளர் சக்தி சந்தானம் பரிசு வழங்கி பாராட்டினர்.
18-May-2025