உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறுவட்ட விளையாட்டு  போட்டிகள் துவக்கம்

குறுவட்ட விளையாட்டு  போட்டிகள் துவக்கம்

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்ணாகிராம குறுவட்ட மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் போட்டியை துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அன்னபூரணி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபால் பேசினார். செயலாளர் சுந்தரேசன் விளையாட்டு அறிக்கை வாசித்தார்.14, 17 ,19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான தனித்தனியே எறிபந்து போட்டிகள் நடந்தது. இதில், 19 வயதிற்குட்பட்ட பிரிவில் பாலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம், 17 ,14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவு மற்றும் 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் சாத்திப்பட்டு அன்னை தெரசா பள்ளி முதலிடம் பிடித்தனர். 19 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஒறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் பள்ளி முதலிடம் பிடித்தது. வரும் 30ம் தேதி வரை போட்டிகள் நடக்கிறது.தனசேகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ