உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்சிப்பொருளான மகளிர் சுகாதார வளாகம்

காட்சிப்பொருளான மகளிர் சுகாதார வளாகம்

புவனகிரி, : புவனகிரி அருகே சுத்துக்குழியில் கட்டி முடிக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் தண்ணீர் வசதியின்றி காட்சிப் பொருளாக உள்ளது.புவனகிரி பேரூராட்சி வார்டு எண்.1ல், கடந்த 2022-23ம் நிதியாண்டில், 15வது மானிய நிதிக்குழுவில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.கடந்த ஓராண்டாக தண்ணீர் வசதி இல்லாமல், பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுகாதார வளாகம் கட்டி முடிக்கப்பட்டும் போர்வெல் அமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் வசதி இல்லாமல் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாமல் காட்சிப்பொருளாக உள்ளது. மழைக்காலம் துவங்கும் முன் போர்வெல் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை