மேலும் செய்திகள்
தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை நிறைவு
01-Apr-2025
கிள்ளை : தா.சோ.பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் சிலம்ப பயிற்சி நிறைவு விழா நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜான்சன் முன்னிலை வகித்தார். படகோட்டிசிலம்ப கலைக்கூடம் நிறுவனர் கார்த்திகேயன் வரவேற்றார். பயிற்சியாளர் வைத்தி, கார்த்திகேயன், அதியமான், ஆதிஸ்ரீ ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்கி பிரபஞ்ச அறக்கட்டளை நிறுவனர் அர்ச்சனா ஈஷ்வர் பரிசு, சான்றிதழ் வழங்கினார். விழாவில், ரிஷிநாத் ஈஸ்வர், ஆசிரியர்கள் வனிதா, எழிலரசி, கண்ணதாசன், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
01-Apr-2025