உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / இயந்திரம் மூலம் ஒற்றை நடவு; பெண்ணாடம் விவசாயிகள் தீவிரம்

இயந்திரம் மூலம் ஒற்றை நடவு; பெண்ணாடம் விவசாயிகள் தீவிரம்

பெண்ணாடம்; பெண்ணாடம் பகுதியில் குறுவை நெல் பட்டத்திற்கு இயந்திரம் மூலம் ஒற்றை நாற்று நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பெண்ணாடம் மற்றும் அரியராவி, மாளிகைக்கோட்டம், துறையூர், சவுந்திரசோழபுரம், கிளிமங்கலம், குருக்கத்தஞ்சேரி, கணபதிகுறிச்சி, பெலாந்துறை, கொத்தட்டை, கொசப்பள்ளம், இருளம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் குறுவை நடவு பணிக்கு, கடந்த 20 நாட்களுக்கு முன் தட்டு நாற்றங்கால் அமைத்தனர்.தற்போது நாற்றுகள் செழிப்பாக வளர்ந்த நிலையில், அரியராவி, மாளிகைக்கோட்டம் கிராம விவசாயிகள் இயந்திரம் மூலம் நடவுப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அரியராவி விவசாயி கூறுகையில், 'பெண்ணாடம் பகுதியில் நாற்று நடுவதற்கு கூலி ஆட்கள் கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் அதிகளவில் இயந்திரம் மூலம் ஒற்றை நாற்று முறையில் நடவு பணியில் ஈடுபடுகின்றனர். ஏக்கருக்கு 15 கிலோ விதை நெல் மட்டுமே தேவைப்படுவதால் செலவும் குறைகிறது. 15 முதல் 20 நாட்கள் ஆன இளம் நாற்றுகளை நடவு செய்வதால் மகசூல் கூடுதலாக கிடைக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை