உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அக்கா சாவில் சந்தேகம் தங்கை போலீசில் புகார்

அக்கா சாவில் சந்தேகம் தங்கை போலீசில் புகார்

பரங்கிப்பேட்டை : அக்கா சாவில் சந்தகேம் இருப்பதாக, தங்கை போலீசில் புகார் செய்துள்ளார்.பரங்கிப்பேட்டை, ஜெயின் பாபா தெருவை சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில். பு.முட்லுார் தனியார் ஓட்டலில் மேலாளர். இவரது, மனைவி பர்க்கத்துன்னிசா, 48; பரங்கிப்பேட்டையில் தேங்காய் கடை வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் இரவு பு.முட்லுார் ஓட்டலில் கணவரை பார்த்து விட்டு திரும்பிய போது, முகத்தில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.டி.எஸ்.பி., லாமேக் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பர்கத்துன்னிசா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தங்கை பர்வீன் அளித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் சந்கே மரணம் பிரிவின் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ