உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தங்கை மாயம் அண்ணன் புகார்

தங்கை மாயம் அண்ணன் புகார்

குறிஞ்சிப்பாடி: பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குனம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன் மகள் மரியகண்ணு, 35. சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் கடந்த, 21ம் தேதி இரவு, வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து அவரது சகோதரர் ஜெயராஜ், 41; கொடுத்துள்ள புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !