மேலும் செய்திகள்
ஆகாயத் தாமரை செடிகள் வளர்ந்து வீணாகும் குளம்
09-Apr-2025
நெல்லிக்குப்பம் : காராமணிக்குப்பம் ராஜாராம் நகரில் சாலை அமைக்கும் பணி துவங்காததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாராம் நகரில் உள்ள 4 தெருக்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த 4 தெருக்களிலும் புதியதாக ஊராட்சி சார்பில் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது.ஒரு மாதத்துக்கு முன் ஒப்பந்ததாரர் பணியை துவக்க சாலையை கொத்தியதோடு சரி. அதன் பிறகு எந்த பணியும் துவங்கவில்லை. இதனால் மக்கள் நடந்தோ அல்லது வாகனங்களிலோ செல்லவோ சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, கடலுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், சாலைப் பணியை விரைவாக துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
09-Apr-2025