உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் ஸ்மார்ட் இந்தியா நிரல்

பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் ஸ்மார்ட் இந்தியா நிரல்

பண்ருட்டி: பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் ஸ்மார்ட் இந்தியா நிரல் நிகழ்ச்சி நடந்தது.பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் ஸ்மார்ட் இந்தியா நிரல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள் தொழில்நுட்ப ரீதியாக புதிய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கினர். நிகழ்ச்சி கல்லுாரி புலமுதல்வர் முத்துகுமரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் ஹரிஹரன் ஆலோசனை வழங்கினர்.பேராசிரியர்கள் செந்தில்குமார், மங்கையர்கரசி ஸ்மாட் இந்தியா நிரல் நோக்கம் குறித்து பேசினர்.பின் மாணவர்களின் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட குழு மாணவர்கள் அடுத்த கட்ட நிரல் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை