உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூழாங்கற்கள் கடத்தல்; லாரி பறிமுதல்

கூழாங்கற்கள் கடத்தல்; லாரி பறிமுதல்

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே கூழாங்கற்கள் கடத்த பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவரை கைது செய்தனர்.கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் தலைமையிலான போலீசார் சாத்தப்பாடி பஸ் நிறுத்தம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த (டிஎன்39 - ஏஎல் 9988) என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை சோதனை செய்தனர்.அதில், அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் கதிர்வேல், 38, என்பவரை கைது செய்தனர். மேலும், டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை