மேலும் செய்திகள்
புயல் சின்னம் எதிரொலி கடலுாரில் கடல் சீற்றம்
30-Nov-2024
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றத்தால், மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகம், ஆந்திராவை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாய்வு பகுதி நிலவுகிறது. இதனால், தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் நேற்றும், இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதனால், கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரைகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகின்றது. கடல் அலையின் சீற்றத்தால், கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மணலால் மூடப்பட்டிருந்த மின் கம்பங்கள், சிமெண்ட் சாலை, சுற்றுலா பயணிகள் அமரக்கூடிய இடம் உள்ளிட்டவை தற்போது வெளியில் தெரிகிறது.இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
30-Nov-2024