உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தென்னிந்திய மல்யுத்த போட்டி கடலுார் மாணவருக்கு பதக்கம்

தென்னிந்திய மல்யுத்த போட்டி கடலுார் மாணவருக்கு பதக்கம்

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பயிற்சி பெற்ற மாணவர், தென்னிந்திய அளவிலான மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும், கடலுார் அண்ணா விளையாட்டரங்க விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெறுபவர் மாணவர் மாதவன்,15. கடலுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இவர் அண்மையில் சேலத்தில் நடந்த தென்னிந்த அளவிலான முதலாம் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 48கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவனை, மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், பயிற்சியாளர் மெய்ஞான மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ