உள்ளூர் செய்திகள்

சிறப்பு முகாம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு ஸ்ரீமுஷ்ணம் தாசில்தார் இளஞ்சூரியன் தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு கோரிக்கை மனுக்கள் பெற்றார். மண்டல துணை தாசில்தார் ரமேஷ்,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர்கள் பிரேம்குமார், சுந்தரேஸ்வரி, உட்பட பலர் பங்கேற்றனர். 109 பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு 9 பேரின் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை