உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராயல் சுசுகி ேஷாரூமில் தீபாவளி சிறப்பு விற்பனை

ராயல் சுசுகி ேஷாரூமில் தீபாவளி சிறப்பு விற்பனை

மந்தாரக்குப்பம்: நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ராயல் சுசுகி ேஷாரூமில் தீபாவளி அதிரடி ஆபர் விற்பனை துவங்கியுள்ளது.விருத்தாசலத்தில் நடைபெறும் தீபாவளி சிறப்பு ஆபர் விற்பனையை இன்ஸ்பெக்டர் முருகேசன் துவக்கி வைத்தார்.வழக்கறிஞர் சங்கரையா முன்னிலை வகித்தார். விருத்தாசலம் நகர வணிகர் சங்க உறுப்பினர் ஜியாவுதீன் அலிமுகமது, பேன்ஸி சில்க்ஸ் உரிமையாளர் ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாக இயக்குநர் முகமது அன்வர் கூறுகையில், 'இருசக்கர வாகனம் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. சுசுகி அக்சஸ், அவெனிஸ், பர்கமன் இருசக்கர வாகனம் மாடல்களுக்கு ெஹல்மட், பைக் பாடிகவர், தங்க காசு உள்ளிட்டவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் சுசுகி கிஸ்ஸர் 150 சி.சி., 250 சி.சி., வி.ஸ்டாம் மோட்டார் பைக் மாடல்களுக்கு எக்சேஞ்ச் ஆபர் 10,000 ரூபாய் தள்ளுபடியும், ரைடிங் ஜாக்கெட் மற்றும் 20,000 ரூபாய் வரை கேஷ் பேக் ஆபர் மற்றும் தங்க காசு வழங்கப்படுகின்றன. வாகனங்களுக்கு அனைத்து பைனான்ஸ் வசதி செய்து தரப்படுகின்றன. அனைத்து கம்பெனி மாடல் வாகனங்களுக்கும் சிறந்த விலைக்கு எக்சேஞ்ச் வசதி செய்து தரப்படுகிறது.வாடிக்கையாளர்களின் வாகனங்கள் சிறந்த முறையில் சர்வீஸ் செய்து தரப்படும். தீபாவளி சிறப்பு ஆபர் விற்பனையால் வாடிக்கையாளர்கள் புதிய சுசுகி இருசக்கர வாகனங்களை ஆர்வத்துடன் தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை