ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் சிறப்பு சபா கூட்டம்
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளிலும் சிறப்பு சபா கூட்டம் மூன்று கட்டங்களாக நடந்தது. அனைத்து வார்டுகளிலும் தனித்தனியாக நடந்த கூட்டத்திற்கு வார்டு கவுன்சிலர்கள் தலைமை தாங்கினர். பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், துணை தலைவர் முத்தமிழரசி பார்த்திபன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் வார்டுகளில் உள்ள குறைகள், தேவைப்படும் பணிகள் குறித்த கேட்டறிந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். அனைத்து வார்டுகளிலும் நடந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர். முடிவில் இளநிலை உதவியாளர் ராஜசேகர் நன்றி கூறினார்.