உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒன்றியக்குழு  உறுப்பினர்கள்  சிறப்பு கூட்டம்

ஒன்றியக்குழு  உறுப்பினர்கள்  சிறப்பு கூட்டம்

சிறுபாக்கம்: மங்களூர் ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் வீராங்கன், தண்டபாணி முன்னிலை வகித்தனர். நிர்வாக மேலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். துணை பி.டி.ஓ.,க்கள் சக்திவேல், கணபதி, குணசேகரன், பொறியாளர் மணிவேல், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.அதில், மங்களூர் ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணியை விரைந்து முடித்து, விரைவில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடத்துவது ஆலோசிக்கப்பட்டது. பின், கவுன்சிலர்கள், அலுவலர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி