சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி எம்.எல்.ஏ., ஆய்வு
நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் குறித்து ஆய்வு நடந்தது. கடலூர் மேற்கு மாவட்டம் , நெய்வேலி சட்டசபை தொகுதிக்குட்பட்ட டவுன்ஷிப் வட்டம் 21 மற்றும் 30 பகுதிகளில் நடந்து வரும் வாக்காளர் திருத்தப்பணிகளை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம், பாகம் வாரியான ஓட்டு மற்றும் படிவ வினியோகம் உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து கேள்விகளை எழுப்பியதுடன், அதை சரி செய்வது குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும், சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிகளை அலட்சியப்படுத்தாமல் மிகுந்த கவனத்துடன் கையாள பாக நிலை முகவர்களை கேட்டுக்கொண்டார். ஆய்வு பணியின் போது நெய்வேலி நகர தி.மு.க., செயலாளர் குருநாதன் உள்ளிட்ட நகர நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் தொ.மு.ச.,வினர் உடனிருந்தனர்.