உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநகராட்சி, நகர்புற உள்ளாட்சிகளில் 27ம் தேதி முதல் வார்டு சிறப்பு கூட்டம்

மாநகராட்சி, நகர்புற உள்ளாட்சிகளில் 27ம் தேதி முதல் வார்டு சிறப்பு கூட்டம்

கடலுார்: கடலுார் மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு சிறப்புக் கூட்டங்கள் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரஹ்மான் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு சிறப்புக்கூட்டங்களை 27 ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடலுார் மாநகராட்சியில் மண்டலம் 1 மற்றும் 2 பகுதிகளில் அந்தப்பகுதி மாமன்ற உறுப்பினர் தலைமையில் வரும் 27ம் தேதி அன்று காலை 11 மணி அளவிலும் மண்டலம் 3 மற்றும் 4 பகுதிகளில் அந்தந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர் தலைமையில் வரும் 28ம் தேதி அன்று காலை 11 மணி அளவிலும் வார்டு சிறப்பு கூட்டம் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அப்போது, அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்போர் நலசங்கம், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு, சாலைகள், பூங்கா, மழைநீர் வடிகால் பராமரிப்பு ஆகியவற்றில் நிலவும் சேவைக்குறைபாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கலாம். பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்தும் முறைகள் பற்றியும் விவாதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை