சனிபெயர்ச்சி சிறப்பு யாகம்
மந்தாரக்குப்பம்: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று புவனேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு யாக பூஜை நடக்கிறது. நவக்கிரகங்களில் மெதுவாக நகரும் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அதன்படி இன்று காலை 8:26 மணிக்கு கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைகிறார். இதனையொட்டி மந்தாரக்குப்பம், புவனேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காலை 6:00 மணியளவில் விக்னேஷ்வர பூஜை மற்றும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து சனிபகவானுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும் தீபாராதனையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை புவனேஸ்வரி அம்மன் கோவில் அன்னதான குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.